1980-களில் கதைக்களம் அமைக்கப்பட்டு உள்ளது. சந்தானம் ஒரு தீவிர கமல் ரசிகர். இவரது தாத்தா ஒரு ரஜினி ரசிகர். இவரது அப்பா, பம்பு செட் அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு குடிகாரர். சந்தானம் இருக்கும் குடும்பம், ஒரு ஜமீன் குடும்பம். மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்தர் ஆகியோர் ஜமீன் குடும்பத்தில் இருக்கும் ஒரு வாளை திருட வருகிறார்கள்.
அந்த கத்தியை பார்ப்பதற்கு, சந்தானத்தின் தாத்தாவிடம் கொடுக்கப்படும் வைரத்தை, அவர் கற்கண்டு என நினைத்து, அதனை சாப்பிட்டு உயிரிழந்து விடுகிறார். சந்தானமும், அவரது தங்கச்சியும், எதற்கெடுத்தாலும் பெட் கட்டி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதனிடையே, தாத்தாவின் இறப்புக்கு வரும் ஒரு பெண்ணை, சந்தானம் சைட் அடிக்கிறார்.
இதைப் பார்த்த சந்தானத்தின் தங்கை, தாத்தாவின் இறுதிச்சடங்கு நடைபெறுவதற்கு, அந்த பெண்ணை விருப்பப்பட வைத்தால், தானும் தனது நண்பர்களும் மொட்டை அடிப்பதாகவும், அவ்வாறு செய்யவில்லை என்றால், சந்தானமும், அவரது நண்பர்களும் 3மாதங்களுக்கு தாவணி போட்டு ஊருக்குள் சுற்ற வேண்டும் என பெட் வைக்கிறார்கள். இந்தப் போட்டியில் யார் ஜெயித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.
தாத்தாவின் உயிரை எடுக்க வந்த எமன், சித்திரகுப்தன் மற்றும் விசித்திரகுப்தன் ஆகியோர், இந்த போட்டி என்ன ஆனது என வேடிக்கை பார்க்கிறார்கள். இந்த கதாபாத்திரங்களில் கே.எஸ்.ரவிக்குமார், முனீஸ்காந்த் மற்றும் கிங்ஸ்லி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
பிணத்தை தாமதமாக எடுக்க வேண்டும் என்று, ஊரில் இருந்து வரும் பெரியப்பாவை குதிரை வண்டியை வைத்து தாமதப்படுத்துவது, பிணவறையில் வேலை பார்க்கும் ஆனந்த்ராஜ், பெண் வேடமிட்டு வைரத்தை திருட வருவது என படம் முழுக்க நிறைய கதாபாத்திரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதிலும், இங்கிலீஷ் திருடனாக கூல் சுரேஷ் ஒரு பக்கமாக வருகிறார்.
ஏ1 படத்தில் பிணத்தை வைத்து செய்த காமெடி, மீம்ஸ் வரை சென்று வைரலானதைப் போல, இந்தப் படத்திலும் பிணத்தை வைத்து படக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், இந்தப் படம் 1982-இல் நடப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தனை கதாபாத்திரங்கள் இருந்து, படமே காமெடியை மட்டுமே நம்பி இருக்கும்போது, அது இல்லாமல் போனதுதான் படத்தின் குறையாக உள்ளது. இருப்பினும், படத்தில் இருக்கும் அதிகமான கதாபாத்திரங்களை வைத்து நல்ல நகைச்சுவை மிகுந்த படத்தைக் கொடுத்திருக்க முடியும்.
ஒருவேளை, கதை ஆலோசனையின்போது படம் நன்றாக இருக்கும் என நினைத்திருப்பார்கள். ஆனால், அது படத்தில் வேலை செய்யவில்லை. இயக்குநர் கல்யாண், இந்தப் படத்தில் காமெடியை சரியாகப் பயன்படுத்தி இருந்தால், இப்படம் ஒரு முரட்டு காமெடி படமாக மாறியிருக்கும்.
சந்தானம், தனக்கு வரும் ஒன்லைன் காமெடிகளை வைத்து அனைவரையும் செஞ்சி விடுகிறார். கதாநாயகி நன்றாக நடித்திருந்தார். சந்தானத்தின் தங்கை மஞ்சக்கிளி, அவருடைய செயற்கையான நடிப்பால், ரசிகர்களின் பொறுமையை வெகுவாக சோதிக்கிறார். மயில்சாமிக்கு வரும் காமெடி லைன் எதற்காக படத்தில் இருக்கிறது என்றே தெரியவில்லை.
மன்சூர் அலிகான், கிங்ஸ்லி என பல கதாபாத்திரங்கள் படத்தில் வந்தாலும், யாரையும் பெரிதாக பயன்படுத்தவில்லை. ஆனந்தராஜ் காமெடி பெரும்பாலும் எரிச்சலை மட்டுமே கொடுக்கிறது. ஒருவேளை, அது சி பிரிவு பார்வையாளர்களுக்கு பிடித்தமானதாக இருக்கலாம். ஆடுகளம் நரைன், ஆங்காங்கே தனது நடிப்பை கொடுத்துள்ளார்.
ஒரு சில காமெடிகளுக்கு சிரிப்பு வருகிறதே தவிர, மற்ற காமெடிகள் வேலை செய்யவில்லை. அதிலும், அவை இரட்டை அர்த்தங்களாகவும், Body Shaming ஆகவும் மட்டுமே இருக்கிறது. முதலில் இது நன்றாக இருந்தாலும், படம் செல்லச் செல்ல மிகவும் வக்கிரமாக மாறுகிறது. அப்பாவின் முன்னாள் காதலியை, மகன் சித்தி என பேசுவது என்ற stepmom காமெடி, பெரியப்பாவை வைத்து மற்ற காமெடி என பிரித்து காமெடி செய்திருக்கிறார்கள்.
இப்படி வைக்கப்பட்டுள்ள அனைத்து அடல்ட் காமெடிகளும் முகம் சுழிக்கும் வண்ணமாகவே உள்ளது. ஜிப்ரான், டி.இமான் போன்று இசை அமைத்திருக்கிறார். பாடல்கள் ஓரளவு கேட்கும் வண்ணம் இருந்தது. இருப்பினும், கதைக்களம் சரியாக இல்லாததால் அதனை ரசிக்க முடியவில்லை. 80-களில் நடக்கும் கதைக்கு ஏற்றார்போல கலை இயக்கம் நன்றாக செய்திருக்கிறார்கள்.
அண்ணன்-தங்கை இடையிலான பந்தயம்தான் கதைக்கரு என்றால், அது தொடர்பான காட்சியை அழுத்தமாக திரைக்கதை ஆக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும். ஆனால், அது பெரிதளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரஜினி-கமலை வைத்து செய்திருக்கும் காமெடி பெரிதாக சிரிக்க வைக்கவில்லை.
மஞ்சக்கிளி என்ற பெயரில் படத்தில் மூன்று பேர் வருகிறார்கள். ஒன்று தாத்தாவின் முன்னாள் காதலி, இதன் நினைவாக தனது பேத்திக்கு மஞ்சக்கிளி என பெயர் வைக்கிறார், மூன்றாவது வைரத்தை திருட வரும் ஆனந்தராஜ், மஞ்சக்கிளி என்ற பெயரிலே அறிமுகம் ஆகிறார்.
ஆனால், உண்மையான மஞ்சக்கிளி யார் என சொல்லும் காட்சி கொஞ்சம் காமெடியாக இருந்தது. நகைச்சுவை நடிகர்களை வைத்து இரட்டை அர்த்த வசனங்களுடன் படம் எடுத்தால், ரசிகர்களிடம் இருந்து கைதட்டல்கள் வரும் என்ற மனநிலையில் இருந்து முதலில் இயக்குனர்கள் வெளிவர வேண்டும்.
இந்தப் படத்தில் அழுத்தமில்லாத திரைக்கதை மற்றும் மேலோட்டமான எழுத்து ஆகியவை பெரிய குறையாக உள்ளது. மொத்தத்தில் இப்படம், சராசரிக்கும் குறைவுதான். இருப்பினும், கதை எல்லாம் வேண்டாம், சிரித்தாள் மட்டும் போதும் என நினைப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
Share this Post
80s Build up movie review
1980-களில் கதைக்களம் அமைக்கப்பட்டு உள்ளது. சந்தானம் ஒரு தீவிர கமல் ரசிகர். இவரது...
Read MoreAnnapoorani Movie Review
நயன்தாரா ஒரு இடத்தில் சமையல் செய்து கொண்டிருக்கிறார். அங்கு ஒரு விபத்து நடக்கிறது....
Read MoreParking Movie review
ஹரீஷ் கல்யாணும், இந்துஜாவும் புது வீடு ஒன்றிற்கு குடி வருகிறார்கள். இதற்கு கீழ்...
Read MoreSivakarthikeyan Vs Imman Controversy Issue | Udhay (LEO)
சோஷியல் மீடியாவில் திரும்பும் பக்கம் எல்லாம் சிவகார்த்திகேயன் – இமான் தொடர்பான செய்திகள்தான்...
Read MoreReady for non-stop movie excitement?
Don’t miss out on movie magic! Tap ‘Subscribe’ and let’s dive into the cinematic adventure together