லோகேஷ் கனகராஜ் கூறியதற்காக, தனது 20 வருடக் கொள்கைகளை எல்லாம் உடைத்து, சிகரெட் எல்லாம் பிடித்தவாறு சூர்யா ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும், சூர்யாவின் ஸ்டட், செயின், டாட்டூ என எல்லாம் இணைந்து ரோலக்ஸ் கதாபாத்திரத்தை அனைவரும் விருப்பமான கதாபாத்திரமாக மாற்றி இருக்கிறது.
முன்னதாக, திரில்லர் படங்களைத் தவிர, பேண்டசி மற்றும் பிளாக் காமெடி வகையில் படம் எடுக்க வேண்டும் என லோகேஷ் கூறியிருந்தார். அதேநேரம், சூர்யாவுக்காக ‘இரும்புக்கை மாயாவி’ படத்திற்காக சுமார் எட்டு மாதங்கள் வேலை செய்திருந்தார். ஆனால், அந்த நேரத்தில் ‘மாநகரம்’ (லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படம்) மட்டுமே வெளியாகி இருந்தது.
இதனால், தனக்கு சூர்யாவை வைத்து இப்படத்தை எடுக்க தைரியம் இல்லை என லோகேஷே சொல்லி இருந்தார். ஆனால், தற்போது ‘விக்ரம்’ திரைப்படம் வெளியாகி 25 நாட்களில் 400 கோடி வசூல் செய்து உள்ளதால், அவருக்கு இரும்புக்கை மாயாவியை எடுக்க முடியும் என நம்பிக்கை இருக்கும்.
அதேநேரம், இதுவரை ஆக்ஷன் களத்தை மட்டுமே வெற்றிப் பாதையில் சேர்த்த லோகேஷுக்கு, ஒரு சூப்பர் ஹீரோ களத்தில் பயணிப்பது புதிய அனுபவங்களைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனிடையே, லோகேஷ் ஒரு டிசி வெறியன் என்பதால், பேட்மேன் படத்தின் சாயலை விக்ரம் படத்திலே பார்த்திருக்கலாம்.
எனவே, ‘ஸ்டீல் கிளாவ்’ என்பதில் இருந்து இரும்புக்கை மாயாவிக்கான ஒரு உந்துதலைப் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கதையின்படி, அறிவியல் விஞ்ஞானி ஒருவரிடம் ஹீரோ உதவியாளராகப் பணிபுரிகிறார். அப்போது, ஒரு விபத்தில் ஹீரோ, தனது வலது கையை இழக்கிறார்.
எனவே, ஹீரோ செயற்கைக் கைகள் வைத்திருக்கும்போது, அவருக்கு மற்றொரு ஆய்வகத்தில் இருந்து ஒரு சக்தி கிடைக்கிறது. இதன் மூலம், அவருக்கு அதிக வோல்ட்டில் மின்சாரம் பாய்ந்தால், அவரிடம் இருக்கும் செயற்கைக் கைகளைத் தவிர, உடலின் மற்ற பாகங்கள் அனைத்தும் மறைந்துவிடும்.
ஆனால், இந்த சக்தியை தவறாகப் பயன்படுத்தும் ஹீரோ, முதலில் திருடுவதையே வழக்கமாகக் கொள்கிறார். இவ்வாறு படத்தின் முதல் பாதியில் வில்லனாக வரும் ஹீரோ, தனது தவறை உணர்கிறார். அப்போது, பிரிட்டிஷின் ஒரு ரகசியக் குழுவில் இணைந்ததற்கு பிறகு, அவரது ஒவ்வொரு விரலிலும் ஒவ்வொரு கருவி வருவது போன்று மாற்றி விடுவார்கள்.
பின்னர், அவர் அதே குழுவில் இருந்து ஏலியன்கள் உடன் வரை சண்டையிட்டு விட்டு, வேலையில் இருந்து ஓய்வு பெறுவார். அதன் பிறகு, ஒரு துப்பறிவாளனாக தென் அமெரிக்காவில் செயல்படுகிறார். இது 60௦, 70களில் வந்த ஒரு புகழ் பெற்ற பிரிட்டிஷ் காமிக்ஸ். இது தமிழ் மற்றும் மலையாளத்திலும் வெளிவந்து வெகுவான ரசிகர்களை சென்றடைந்து இருந்தது.
இருப்பினும், லோகேஷ் தனது கையில் வைத்திருக்கும் கைதி 2, லியோ மற்றும் விக்ரம் 2 ஆகிய படங்களுக்குப் பிறகுதான் இரும்புக்கை மாயாவியை கையில் எடுக்க உள்ளார். எனவே, லோகேஷின் அப்போதைய வணிக மதிப்பை பொறுத்தவரை, படத்தின் பட்ஜெட் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இவை அனைத்தும் சரியாக செட் ஆகிவிட்டால், மின்னல் முரளி போன்று ஒரு தரமான திரைப்படம் தமிழில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இவை அனைத்தையும் லோகேஷ் தனது பாணியில் எவ்வாறு வெளிப்படுத்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Share this Post
Ready for non-stop movie excitement?
Don’t miss out on movie magic! Tap ‘Subscribe’ and let’s dive into the cinematic adventure together