ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 90 – 100 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சாதனையைப் படைத்ததன் மூலம், தமிழ் சினிமாவின் டாப் ஓப்பனிங் பாக்ஸ் ஆபீஸில் ஜெயிலர் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினியின் படமே 3வது இடம் என்றால், டாப் 2 படங்கள் என்னென்ன என்று கேட்க வேண்டாம்.
ஏனென்றால், அந்த டாப் 2 படங்களும் ரஜினியின் படங்கள்தான். 2.0, கபாலி ஆகிய படங்களுக்குப் பிறகு ஜெயிலர் மட்டுமே 100௦௦ கோடி அளவில் வசூல் செய்த படம் ஆகும். கபாலி, 2.0 ஆகிய படம் மூலம் ரஜினி படைத்த முதல் நாள் வசூல் சாதனையை யாரும் இதுவரை முறியடிக்கவில்லை.
அதேநேரம், அஜித்குமார், விஜய் ஆகியோரது வணிக மதிப்பு தமிழ்நாட்டில் ரஜினியை விட வலிமையாகவே உள்ளது. இதில், தற்போதுதான் விஜய் தனது வணிக மதிப்பை தமிழ்நாட்டிற்கு வெளியே விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், உலக அளவில் நம்பர் 1, நம்பர் 2, நம்பர் 3 என அனைத்துமே ரஜினிதான்.
முன்னதாக, அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் வாரிசு, துணிவு ஆகிய படங்கள் முழுவதும் ஓடி எடுத்த வசூலை, ஜெயிலர் ஒரே நாளில் முறியடித்து உள்ளது. தென்னிந்திய நடிகர்களில் ரஜினி ஐந்து 2 மில்லியன் திரைப்படங்களை தன்னகத்தே வைத்துள்ளார்.
இதற்கு அடுத்ததாக, மகேஷ் பாபு, பிரபாஸ் ஆகியோர் 2 மில்லியன் திரைப்படங்களை நான்காக கொண்டுள்ளனர். இதனையடுத்து, ஜுனியர் என்டிஆர் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் மூன்று 2 மில்லியன் படங்களைக் கொடுத்துள்ளனர்.
மற்ற திரைத் துறைகளில் எல்லாம், விஜய், அஜீத்துக்குப் பிறகு வந்த நடிகர்கள் எல்லாம் அவர்களது வணிக மதிப்பை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதனிடையே, ‘ரஜினி ஒரு தமிழனா?’ என கேட்பார்கள். ஆனால், இன்று ரஜினி இல்லையென்றால், தமிழ் சினிமாத்துறை மிகவும் மோசம் அடைந்திருக்கும்.
இன்னும் சொல்லப்போனால், இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த வசூலை ஜெயிலர் அமெரிக்காவில் முறியடித்து 3 மில்லியனைத் தாண்டி சென்றிருக்கும். ஏன், பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான புரோமோஷன் பல மடங்கு இருந்தும், ரஜினியின் பட அளவு வசூல் இல்லை.
பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற படங்கள் ஒரே நாளில் 200௦௦ கோடி அளவு வசூல் செய்தது. அதேபோல் கேஜிஎப் 2 படமும் 150௦ கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில்தான், ரஜினி, தனது படத்தை வைத்தே மீண்டும் ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாத்துறையும், மற்ற சினிமாத் துறையைப் போன்று முன்னேற வேண்டும் என்றும், அனைத்து தரப்பட்ட சினிமா ரசிகர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிதான் ரஜினி தனது இசை வெளியீட்டு விழாவில் கூட பேசியிருப்பார்.
இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இவை அனைத்தும் விழாக் கால விடுமுறை தினத்தில் வெளியிடப்பாமல், சாதாரண வேலை நாட்களில் வெளியான திரைப்படங்கள்தான் (2.0, கபாலி மற்றும் ஜெயிலர்). இவற்றில், 2.0 ஒரு பான் இந்தியா திரைப்படமாக, எந்திரன் படத்தின் உத்வேகமாக வந்தது. கபாலி திரைப்படத்திற்கான புரோமோஷன் எப்படி இருந்தது என்பதை அனைவரும் அறிவர்.
ஆனால், சரியான புரோமோஷன் இல்லாமல், கடந்த இரண்டு திரைப்படங்களும் (தர்பார், அண்ணாத்த) எவ்வாறு ரசிகர்களிடம் சென்றடைந்தது என்பதை உணர்ந்த ரஜினி, தமிழ் சினிமாவே போராடிக் கொண்டிருக்கும் ஒன்றை மிகவும் சாதாரணமாக எடுத்துச் செல்கிறார் என்றால், அவருடைய வணிக மதிப்பு எப்படி இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
Share this Post
Ready for non-stop movie excitement?
Don’t miss out on movie magic! Tap ‘Subscribe’ and let’s dive into the cinematic adventure together