Movie Buddie

இமாச்சலப்பிரதேசம் பக்கத்தில் இருக்கும் ஒரு ஊரில் கதை தொடங்குகிறது. விஜய், தனது மனைவி மற்றும் குழந்தைகள் உடன் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், ஒரு ஹய்னா (Hyena) வருகிறது. இதனைப் பிடிக்க கெளதம் மேனனுக்கு விஜய்யின் உதவி தேவைப்படுகிறது.

பார்த்திபன் எப்படிப்பட்டவர், அவருடைய வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்பதை காண்பித்து விட்டு, கதைக்குள் செல்கிறது. விஜய், அவரது கடையில் இருக்கும் நேரத்தில், சாண்டி மற்றும் மிஷ்கின் ஆகியோர் அவரது கடைக்கு வந்து பிரச்னை செய்கிறார்கள். இதனிடையே, ஒரு இக்கட்டான சூழலில் விஜய் செய்கிற செயல், அவரை தலைப்புச் செய்திக்கு கொண்டு வருகிறது.

இவ்வாறு விஜய்யின் போட்டோ, ஊடகங்கள் வாயிலாக பரவத் தொடங்கியதும், நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் ரவுடிக்கள், விஜய்யைத் தேடி வருகின்றனர். அவ்வாறு தேடி வரும் அனைவருமே, நீதான் லியோ என ஒத்துக் கொள்ள சொல்கின்றனர். ஆனால், விஜய் இறுதி வரை, தான் லியோ இல்லை என கூறுகிறார்.

ஏன் லியோவை இவர்கள் அனைவரும் தேடுகிறார்கள், பார்த்திபனுக்கும், லியோவுக்கும் என்ன சம்பந்தம், பார்த்திபன்தான் உண்மையான லியோவா அல்லது லியோ என்பது வேறு ஒரு நபரா என்பது படத்தின் மீதிக்கதை.

விஜய்யின் கதாபாத்திரம் மீதுதான் படம் பயணமாகிறது. படம் தொடங்கி, பார்த்திபன் அறிமுகமானதில் இருந்து, கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு, விஜய் சிறப்பாக நடித்திருக்கிறார். முக்கியமாக ‘நா ரெடி’ பாடலில் நடனம் சிறப்பாக இருந்தது .கிரிஞ் காட்சிகள் லியோ கதாபாத்திரத்திற்கும், ஹேர் ஸ்டைல் பார்த்திபன் கதாபாத்திரத்திற்கும் பெரிய மைனஸாகவே உள்ளது.

விஜய்க்கும், Hyena-க்குமான மெடாபர் அருமையாக இருந்தது. கஷ்டமான சண்டைக் காட்சிகளில், மெனக்கெட்டு விஜய் நடித்திருப்பது, திரையில் தெரிகிறது. சமீப காலங்களில் வெளியான விஜய் படங்களிலேயே, லியோ திரைப்படம்தான் விஜய்யின் நடிப்புத் திறனை வெளிக் கொண்டு வந்துள்ளது.

அதிலும், படத்தின் இரண்டாம் பகுதியில் விஜய் அழும் காட்சிகள், உணர்வுப்பூர்வமான ஒன்றாக அமைந்துள்ளது. Hyena-வில் தொடங்குகிற லியோ படம், பொறுமையாக கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி கதைக்குள் செல்கிறது.

இருப்பினும், கைதி மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்களில் 15-வது நிமிடத்தில் தொடங்குகிற சஸ்பென்ஸ் பகுதி, லியோ படத்தில் ஒரு மணி நேரத்திற்கு பிறகே வருகிறது. இவ்வாறு பொறுமையாக கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து, கதைக்குள் சென்று கதையின் உச்சம் தொடும்போது, Badassmaa பாடலோடு இடைவேளை விடப்படுகிறது.

படத்தின் இரண்டாம் பகுதி, லோகேஷ் கனகராஜின் பகுதி. எனவே, படத்தின் முதல் பகுதியில் வைத்த சஸ்பென்ஸ், இரண்டாம் பகுதியில் மாஸாக வரப்போகிறது என உட்காரும் நமக்கு, படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளைப் பார்க்கும்போது, உண்மையிலேயே நாம் லோகேஷ் கனகராஜின் படம்தான் பார்க்கிறோமா என்கிற சந்தேகம் எழுகிறது.

ஏனென்றால், இப்படி ஒரு தரம் குறைந்த ஒரு எழுத்தை யாரும் லோகேஷ் கனகராஜிடம் இருந்து எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பிளாஷ்பேக் காட்சிகளில் ஒரு மாதிரியாக தடம் புரண்ட படம், பலவீனமான திரைக்கதையினால் மிகவும் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் வைத்த ட்விஸ்ட்-ம் பெரிதாக எடுபடவில்லை.

பிலாஷ்பேக்கின் மூலம் லியோ இவ்வாறுதான் உருவாகினார் எனக் கூறுவது சரியாக இணையவில்லை. இதனால் படத்தின் இரண்டாம் பகுதி தனி டிராக்கில் செல்கிறது. இருந்தாலும், லியோ ஒரு பக்காவான ஆக்ஷன் படம். தொழில்நுட்ப ரீதியாகவும் ஒரு வலிமைமிக்க படமாகவே லியோ உள்ளது.

இதனை, நாம் படம் பார்க்கிறோமா அல்லது ரோலர் கோஸ்டரில் பயனமாகிறோமா என்று மனோஜ் பரமஹம்சா மிகப்பெரிய சம்பவத்தை செய்திருக்கிறார். Hyena காட்சிகளின் VFX சில இடங்களில் சொதப்பி இருந்தாலும், பல இடங்களில் நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

கார் சேஸ் காட்சிகள் இன்றும் சிறப்பாகவே செய்திருக்கலாம். ஆனால், இதனை ஹாலிவுட் தரம் என சொல்வது கொஞ்சம் ஓவர்தான். ஏனென்றால், அந்த காட்சியே NFX கேம் மாதிரிதான் இருந்தது. Dass & Co பேக்டரி காட்சிகள் அனைத்தும் ஏதொ அட்டையை வெட்டி ஒட்டியவாறுதான் இருந்துள்ளது.

விக்ரம் படத்தில் கமல்ஹாசன் ஏன் இறந்த மாதிரியே நடிக்கிறார் என்றும், அவர் ஏன் ஒரு பேயாக வருகிறார் என்பதற்கும் ஒரு வலுவான காரணம் இருக்கும். ஆனால், லியோ ஏன் இவ்வாறு இருக்கிறார் என்பதற்கான வலுவான காரணம் என்பது இல்லை. படத்தின் இரண்டாம் பகுதியில் சிகரெட் வாசம் பிடிக்காது என கூறிவிட்டு, Hyena உடனான சண்டையின்போது சிகரெட்டை பிடித்தவாறே விஜய் சம்பவம் செய்கிறார். லியோ, அவரே அவரை ஏமாற்றிக் கொள்கிறாரா அல்லது ரசிகர்களை ஏமாற்றுகிறாரா என்பது குழப்பமாகவே இருக்கிறது.

த்ரிஷாவுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம், அவர், அதனை சிறப்ப்பாக செய்திருக்கிறார். ஆனால், எவ்வளவு கலவரம் நடந்தாலும், த்ரிஷா மேக்கப் கலையாமல் அழகாகவே இருக்கிறார். அர்ஜுன் ஒரு ஆக்ரோஷமான கதாபாத்திரமாக அறிமுகமாகிறார். படம் முழுவதும் ஒரு நெருப்பாகவே வலம் வருகிறார். ஆனால், அர்ஜுனின் கதாபாத்திரத்தை சரியாக எழுதாதது, படத்தின் இரண்டாம் பகுதியில் அவரை டம்மியாக மாற்றி விடுகிறது.

தேபோல், சஞ்சய் தத்தின் கதாபாத்திரம் பெரிதாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மிஷ்கின், சாண்டி வரும் பகுதி நன்றாக இருந்தது. கைதி படத்தில் வரும் ஜார்ஜ், லியோ படத்தின் பூஜை புகைப்படத்தில் இருக்கும்போதே, லியோ படம் LCU-வில் இணையும் என அதிகமானோர் யூகித்து இருந்தனர்.

[படத்தில் இருக்கும் ஜார்ஜ் மரியமின் கதாபாத்திரம், LCU-வில் இணையுமா என்பதை நீங்கள் படத்தில் பார்த்துக் கொள்ளுங்கள். இவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் பெரிதும் வரவேற்றாலும், படத்தின் இரண்டாம் பகுதியில் வரும் LCU பகுதிகளைத் தவிர, இவரது கதாபாத்திரம் பெரிதாக எடுபடவில்லை.

கவுதம் மேனன் படம் முழுவதும் வருகிறார். ஆனால், அவரது மனைவி ப்ரியா ஆனந்துக்கு பெரிய வாய்ப்பு தரப்படவில்லை. விக்ரம் திரைப்படத்தின் பெரிய பலமாக பார்க்கப்படுவது, அதன் கதாபாத்திரங்கள்தான். ஆனால், லியோ படத்தின் கதாபாதிரங்கள் திரையில் தேவை அற்றதாக மாரி விடுகிறது.

அனுராக் காஷ்யப்-ஐ அழைத்து வந்து இப்படியான காட்சியில் வைத்ததற்கு, அவரது ரசிகர்கள் அவரை லோகேஷ் கனகராஜை மன்னிக்கவே மாட்டார்கள். மடோனா செபாஸ்டின் ஒரு சர்ப்ரைஸ் கதாபாத்திரத்தை செய்திருந்தாலும், இவர் வரும் பகுதிதான் படத்தின் பெரிய மைனஸாக பார்க்கப்படுகிறது.

அனிருத் வழக்கம் போல் சிறப்பாக செய்திருக்கிறார். இருப்பினும், ஜெயிலர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் செய்த சம்பவங்களாக இல்லாமல், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார், அனிருத். முக்கியமாக I am scared என்ற பாடல், Master the Blaster என்பதைப் போல் இருந்தது.

மன்சூர் அலிகான், பிளாஷ்பேக்-ஐ சொல்கிற ஒரு கதாபாத்திரமாக அழகாக வந்து செல்கிறார். மேலுஜ்ம், த்ரிஷா-விஜய் இடையிலான சில காட்சிகளை படத்தின் இரண்டாம் பகுதியில் இருந்து எடுத்திருக்கிறார்கள். அதேபோல், நா ரெடி பாடலில் சில தேவையற்ற எடிட்களினால், லியோ வரும் பகுதியை பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

காபி ஷாப் சண்டைக் காட்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தது, அனால், இடையிடையே வரும் ரெட்ரோ பாடல்கள், அந்த காட்சியின் மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது. லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களில் உள்ள சில பகுதிகள் ஹிட் அடித்ததால், லோகேஷின் ஸ்டைல் என்ற கருத்தின் அடிப்படையில், தேவையில்லாத சில விஷயங்களை திணிப்பது போன்று உள்ளது.

படத்தின் முதல் பகுதிக்கு எடுத்த நேரத்திற்கு ஏற்றவாறு படத்தின் இரண்டாம் பகுதி சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லை என்பதால், படத்தின் முதல் பகுதி சராசரிதான். மேலும் இரண்டாம் பகுதி சராசரிக்கும் குறைவுதான்.

விஜய்-த்ரிஷா காட்சிகள் மற்றும் சுப்ரமணி காட்சிகள் எல்லாம் Movie Buddie-க்கு பிடித்துள்ளது. History of Violence கதையில் LCU-ஐ இணைத்து அதில் ஆக்ஷன் காட்சிகளை சேர்த்தால் லியோ தயாராகி விடும்.

கைதி, விக்ரம் என்ற காட்சிகளை வைத்தாலும், அவை அனைத்தையும் வேண்டும் என்றே வைத்ததுபோலத்தான் இருந்ததே தவிர, அது கதைக்கு பெரிதாக உதவவில்லை. கைதி, விக்ரம் அனைத்தும் ரசிகர்களோடு ஒன்றியதர்கான காரணாம், அவை நமது கதைக் களத்தில் இருக்கும். ஆனால், லியோ இமாச்சலில் நடப்பதால், ரசிகர்கள் உடனான பிணைப்பு இல்லை.

எனவே, லோகேஷ் கனகராஜ் நேரம் எடுத்து, சிறப்பான திரைக்கதையை உருவாக்கி, அடுத்த திரைப்படத்தை எடுக்க வேண்டும். படத்தில் எழுத்து சரியில்லை என்றால், உணர்வுகள் தடைபட்டு, ஆக்ஷன் திரைப்படங்கள் அப்படியே நின்றுவிடும். இயற்கையாகவே லோகேஷின் படத்தில் வரும் காட்சிகளை, லியோவில் ஏன அழுத்தமாக கொடுத்திருக்கிறார் எனத் தெரியவில்லை.

அதிலும், லியோ படத்தின் இரண்டாம் பகுதியில் லியோவின் கதாபாத்திரத் தன்மையைப் பார்க்கும்போது, இதனை உண்மையிலேயே லோகேஷ்தான் இயக்கினாரா அல்லது ரத்தினகுமார் இயக்கினாரா என்ற சந்தேகம் எழுகிறது. கணவரின் இறப்புக்கு பழி வாங்கும் வரை எழ மாட்டேன் என சபதம் போடும் காட்சிகள் எல்லாம் எதற்காக வைத்திருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை.

விஜய் மாதிரியான ஒரு நடிகர், அவருடைய வளையத்தை விட்டு வெளியே வந்து இப்படியான ஒரு படத்தில் நடித்ததற்கு பாராட்டியே ஆக வேண்டும். ஆனால், லோகேஷ் கனகராஜ் இப்படியான ஒரு சம்பத்தை செய்வார் என கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை.

லோகேஷ் கனகராஜின் திரைப்பட பயணத்திலேயே ஒரு வலுவிழந்த படம் என்றால், அது லியோதான். மாஸ்டர் படத்தில் கூட பவானியின் கதாபாத்திரம், ஜேடி கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு இருப்பது போலத்தான் தோன்றும். இவ்வாறு, பவானி தனி வில்லனாக இருந்தாலும் மிரட்டி இருப்பார்.

ஆனால், லியோவில் இரண்டு வில்லன்கள் இருந்தாலும், பவானியில் 10 சதவீதம் கூட இல்லை. LCU பகுதிகளும் இல்லை என்றால், படத்தில் பெரிதாக ஏதும் இருந்திருக்காது. இது ஒரு சராசரியான படம். விஜய்யின் உழைப்பிற்காக அவரது ரசிகர்கள் இதனை பார்க்கலாம். மேலும், குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தைகளுக்கான படம் லியோ அல்ல.

லியோ படத்தில் லிப்லாக் காட்சிகள் இருக்கும் என Movie Buddie மூன்று மாதத்திற்கு முன்னதாக கூறியபோது யாரும் நம்பவில்லை. ஆனால், பெரும்பாலான பகுதிகள் Movie Buddie முன்பே கணித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Post

80s Build up movie review

1980-களில் கதைக்களம் அமைக்கப்பட்டு உள்ளது. சந்தானம் ஒரு தீவிர கமல் ரசிகர். இவரது...

Read More

Annapoorani Movie Review

நயன்தாரா ஒரு இடத்தில் சமையல் செய்து கொண்டிருக்கிறார். அங்கு ஒரு விபத்து நடக்கிறது....

Read More

Parking Movie review

ஹரீஷ் கல்யாணும், இந்துஜாவும் புது வீடு ஒன்றிற்கு குடி வருகிறார்கள். இதற்கு கீழ்...

Read More

Sivakarthikeyan Vs Imman Controversy Issue | Udhay (LEO)

சோஷியல் மீடியாவில் திரும்பும் பக்கம் எல்லாம் சிவகார்த்திகேயன் – இமான் தொடர்பான செய்திகள்தான்...

Read More

Ready for non-stop movie excitement?

Don’t miss out on movie magic! Tap ‘Subscribe’ and let’s dive into the cinematic adventure together

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *