விடாமுயற்சி அப்டேட்ஸ் கேட்டுக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு, யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு, மூன்று அப்டேட்ஸ் வந்திருக்கிறது. மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்குமாரின் அடுத்த படத்தை இயக்க உள்ளார்.
ஆதிக், அஜித்குமாரின் தீவிர ரசிகர். நேர்கொண்ட பார்வை படத்திலேயே இருவருன் இணைந்து நடித்திருந்தனர். AAA, பஹீரா போன்ற படங்களை இயக்கியவரிடம், Genre-ஐ அஜித் மாற்ற சொல்லி இருக்கிறார். இந்த விஷயத்தை ஆதிக், பல நேர்காணலில் வெளிப்படுத்தி இருப்பார்.
இதன் பிறகு ஆதிக் இயக்கிய மார்க் ஆண்டனி, தொடர்ச்சியாக ஏழு தோல்விகளைக் கொடுத்து 50 கோடி வசூலைக் கொடுக்க கஷ்டப்பட்ட விஷாலை, ரூ.100 கோடி கிளப்பில் இணைய வைத்தது. AK 63 படத்தை, விடுதலை படத்தை தயாரித்த RS Infotainment தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்திற்கு அஜித்குமாரின் சம்பளம் ரூ.160 கோடி என தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கும் நேரத்தில், AK 63 –ஐ விட, AK 64 படத்தின் அப்டேட் இன்னும் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. அஜித், ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் இரண்டு மூன்று படங்களில் நடிப்பார்.
அந்த வகையில், RS Infotainment உடன் அஜித் இணையும் இரண்டாவது படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஒருவேளை, வெற்றிமாறன் இயக்கவில்லை என்றால், இரும்புத்திரை மற்றும் சர்தார் ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் இயக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
இயக்குநர் சிவா உடன் இணையாமல் இருந்தாலே போதும் என்ற மனநிலையில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு, வெற்றிமாறன் உடன் அஜித் இணைவது போன்ற செய்திகள் அஜித்குமார் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட்தான்.
2007 முதல் 2013 வரை அதிகமான இளைஞர்களை ரசிகர்களாகக் கொண்டிருந்த அஜித்குமார், அடுத்த பத்து வருடத்திற்கு தனது பார்வையை குடும்ப ரசிகர்கள் பக்கம் திருப்பிவிட்டார். அஜித்குமாரின் திரை வாழ்விலேயே ‘துணிவு’ படம் அதிக வசூலைக் கொடுத்திருப்பதால், அஜித்குமார் தனது பாணியை மாற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
மீண்டும் சிவா உடன் படம் பண்ணாமல், புது காம்போவை அஜித் தேர்ந்தெடுப்பதை பார்க்கும்போது, அஜித் ஏதொ ஒரு முடிவு எடுத்தது போன்றுதான் தெரிகிறது. ஒருவேளை, வெற்றிமாறன் உடன் அஜித் படம் நடித்தால், அது வேற மாறி சம்பவமாக இருக்கும். இவ்வாறான தகவல்கள் அனைத்தும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வரும் என நம்புவோம்.
விடாமுயற்சி படத்தில் த்ரிஷா மற்றும் ஹியூமா குரேஷி ஆகிய இருவரும் நடிப்பதாக Movie Buddie கூறி இருந்தது. ஆனால், தற்போதைய நிலவரப்படி, ஹியூமாவுக்குப் பதிலாக ரெஜினா படத்தின் இணைந்துள்ளார். எனவே, படத்தில் இரண்டு நடிகைகள் இருப்பதால், அஜித்குமார் அப்பா-மகனாக இரட்டை வேடத்தில் நடிக்கலாம் என்ற தகவலும் வருகின்றன.
Leo Third single அன்பெனும் ஆயுதம் வெளியாகி இருக்கிறது. பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது. அனிருத்தே அனைத்து பாடல்களையும் பாடுகிறார் என தமிழ் சினிமாவில் புகார் இருக்கும் நிலையில், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியான பாடல் தமிழை விட நன்றாக இருக்கிறது. Metals-க்கு இடையில் Petals என்பது போன்று, ஆக்ஷன் படத்திற்கு இடையில் ஒரு Breeze- ஆன ஒரு மெலோடியாக உள்ளது.
அன்பெனும் ஆயுதம் பாடலின் காட்சிகள் அனைத்தும் லியோ படத்திற்கு வேறு ஒரு கண்ணோட்டத்தைக் கொடுத்துள்ளது. லியோ ஒரு ஆக்ஷன் படமாக இல்லாமல், ஒரு குடும்ப படமாகவும் இருக்கும் என்ற நிலையை இப்பாடல் கொடுக்கிறது.
லியோ படத்தின் சிறப்பு என்னவென்றால், கதாபாத்திரத் தேர்வுதான். அதிலும், இந்த பாடலில் விஜய்-த்ரிஷா காம்போவைப் பார்க்கும்போது மிகவும் அருமையாக இருக்கிறது. வேறு எந்த நடிகையை நடிக்க வைத்திருந்தாலும், இந்த அளவிலான தாக்கம் இருந்திருக்காது.
குருவி திரைப்படத்திற்கு பிறகு, ,கிட்டத்தட்ட 17 வருடத்திற்கு பிறகு கில்லி பட வேலு-தனலட்சுமி என இந்த ஜோடியை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். கௌதம்மேனன், விஜய்யின் நண்பர். அவருடைய மனைவியாக ப்ரியா ஆனந்த் நடித்திருக்கிறார். மேத்திவ் தாமஸ், குட்டி பாப்பா என இவர்களை காண்பித்துள்ள அனைத்து காட்சிகளும் மிகவும் அழகாக அமைந்துள்ளது.
பிக்பாஸ் ஜனனிக்கும், மேத்திவ் தாமஸ்-க்கும் காதல் இருக்கும் எனத் தெரிகிறது. அதிலும், விக்ரம் படத்திற்கு காயத்ரி என்றால், லியோ படத்திற்கு ஜனனி எனவும் நினைக்க வைக்கிறது. ஆனால், கைதி மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் இப்படியான பாடல் இருக்காது. அதேநேரம், லியோ படத்தில் விஜய்யின் குடும்பத்தை பொறுமையாக காண்பித்துவிட்டு, கதைக்குள் செல்வார்கள் எனத் தெரிகிறது.
அதன் பிறகு, படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் லோகேஷ் கனகராஜின் சரவெடிதான். லியோ படத்தின் முதல் பகுதி ஒரு மணி நேரம் 15 நிமிடங்களும், இரண்டாம் பகுதி ஒன்றரை மணிநேரமும் இருக்கிறது. அதிலும், லியோவின் பிளாஷ்பேக் பகுதி 50 நிமிடம் ஓடும் என கருதப்படுகிறது.
போஸ்டர் மற்றும் டிரெய்லரில் விஜய் கருப்பு சட்டையில் மட்டுமே இருப்பதால், படத்தில் ஒரே இரவில் நடக்கக் கூடிய காட்சிகள் இருக்கும் எனவும் கருதப்படுகிறது. சமீபத்தில் வெளியிட்ட ஐமேக்ஸ் போஸ்டரில், விஜய்யின் கையை கட்டிப் போட்டு இருப்பார்கள் என்றும், அதை அவிழ்த்துக் கொண்டு வந்து, விஜய் சம்பவம் செய்யப் போகிறார் என கணிக்கப்படுகிறது.
லியோ படத்திற்கு ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடலாம் என அரசு அனுமதி அளித்தது என நாம் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால், இன்று லியோ குழுவினர் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரியுள்ளனர். இதனால்தான், இன்னும் பெரிய தியேட்டர்களில் இன்னும் முன்பதிவு தொடங்காமல் இருக்கிறார்கள்.
இந்த மனுவிற்கான முடிவு நாளை தெரிந்துவிடும், இதன் பிறகுதான் பெரும்பாலான திரையரங்குகளில் புக்கிங் தொடங்கும். படத் தயாரிப்பு நிறுவனம் பெரிதாக புரோமோஷன் கொடுக்கவில்லை என்றாலும், தமிழ் சினிமாவில் எந்திரன் மற்றும் கபாலி திரைப்படத்திற்கு பிறகு, லியோ அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது
கேரளாவில் இருந்து கனடா வரை முன்பதிவு அதிகமாக இருக்கிறது. இதனிடையே, ரஜினியிடல் லியோ திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் தனது வாழ்த்துகளைக் கூறியிருக்கிறார். லோகேஷ் கனகராஜ், ரஜினி உடன் அடுத்து இயக்க உள்ள படத்தின் கதையை கூறி இருக்கிறார். அதனைக் கேட்ட விஜய், பத்து நிமிடத்தில் எந்த கதையும் தன்னை இவ்வளவு பாதிக்கவில்லை என கூறி இருக்கிறார்.
எனவே, தலைவர் 171 படமும், ஒரு வெயிட்டாக தயாராகி வருவது போன்று தெரிகிறது. ரஜினி, தற்போது தலைவர் 170 படப்பிடிப்பில் இருக்கிறார். கிட்டத்தட்ட 46 வருடங்களுக்குப் பிறகு ரஜினி திருநெல்வேலிக்கு சென்றிருக்கிறார். திரும்பும் திசையெல்லாம், ரஜினிக்கு மக்கள் உற்சாக வரவேற்பை அளித்து வருகிறார்கள்.
Share this Post
80s Build up movie review
1980-களில் கதைக்களம் அமைக்கப்பட்டு உள்ளது. சந்தானம் ஒரு தீவிர கமல் ரசிகர். இவரது...
Read MoreAnnapoorani Movie Review
நயன்தாரா ஒரு இடத்தில் சமையல் செய்து கொண்டிருக்கிறார். அங்கு ஒரு விபத்து நடக்கிறது....
Read MoreParking Movie review
ஹரீஷ் கல்யாணும், இந்துஜாவும் புது வீடு ஒன்றிற்கு குடி வருகிறார்கள். இதற்கு கீழ்...
Read MoreSivakarthikeyan Vs Imman Controversy Issue | Udhay (LEO)
சோஷியல் மீடியாவில் திரும்பும் பக்கம் எல்லாம் சிவகார்த்திகேயன் – இமான் தொடர்பான செய்திகள்தான்...
Read MoreReady for non-stop movie excitement?
Don’t miss out on movie magic! Tap ‘Subscribe’ and let’s dive into the cinematic adventure together