நம்முடைய தமிழ் சினிமாவில் ஆரண்ய காண்டம் – சுப்பு, வடசென்னை – சந்திரா, படையப்பா – நீலாம்பரி, ஆயிரத்தில் ஒருவன் – அனிதா என சில வலிமைமிக்க பெண் கதாபாத்திரங்களைப் பார்த்திருப்போம். ஆனால், இந்த கதாபாத்திரங்களுக்கு எல்லாம் தாயாக இருப்பது, கல்கி எழுதிய ‘நந்தினி’ கதாபாத்திரம்தான்.
இது ஒரு தனித்துவமான கதாபாத்திரம். ஏனென்றால், மிக நேர்த்தியாக தமது காரியத்தை செய்யும் இந்த கதாபாத்திரம்தான் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அனிதா (ரீமாசென்) கதாபாத்திரம். பழி வாங்க வேண்டும் என்று துடிக்கும் அனிதா, சோழர்கள் போன்று அவர்கள் கூடவே இருந்து, அவர்களை நம்ப வைத்து மோசடி செய்வார்.
எனவே, இந்த கதாபாத்திரத்தை செல்வராகவன், நந்தினி கதாபாத்திரத்தை வைத்துதான் எழுதியிருப்பார். அதேபோல், வடசென்னை படத்தில் சந்திராக்கு (ஆண்ட்ரியா) நடப்பதுதான், அப்படியே பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினுக்கும் நடந்திருக்கும்.
வடசென்னையில் வீர பாண்டியன்தான் ராஜன். ராஜனை கொன்றவர்களை பழி வாங்குவதற்காகவே குணாவைத் திருமணம் செய்வதுபோல் நடிப்பது போன்றுதான், நந்தினி பழுவேட்டரையரை திருமணம் செய்திருப்பாள்.
இதில், கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில், நந்தினியை பழுவேட்டரையர் தொடக் கூட அனுமதித்திருக்க மாட்டார்கள். ஆனால், படத்தில் சினிமாட்டிக் நுட்பத்திற்காக கட்டிப் பிடிப்பது, மோதிரம் மாட்டி விடுவது போன்று கான்பித்திருப்பார்கள்.
மேலும், வடசென்னையில் ராஜனின் விசுவாசிகளை வைத்து தனி ஒரு பெண்ணாக பழி வாங்குவது போன்றுதான், நந்தினி சிவதாசன் உதவியோடு சோழர்களை வீழ்த்த நினைப்பாள்.
அதேநேரம், ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கும் மற்றுமொரு கதாபாத்திரம், ஊமைராணி என்ற மந்தாகிதேவி. அருள்மொழிவர்மனின் சண்டைக் காட்சிகளின் இறுதி ஷாட்டில், ஊமைராணி ஜெயம் ரவியை காப்பாற்றி இருப்பார். இதில் இருந்துதான் இவருக்கு பொன்னியின் செல்வன் என்கிற பெயர் வந்திருக்கும்.
இந்த பகுதியில் இருந்துதான், பாகுபலியில் ராஜமாதா அரசரைக் காப்பாற்றும் காட்சியை ராஜமெளலி எடுத்திருப்பார். பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியின் பிறப்பே ஒரு அபூர்வம்தான். ஆனால், படத்தில் ஆழ்வார்க்கடியான் அம்பி வந்தியத்தேவனிடம் பேசும்போது, நந்தினி எங்கு பிறந்தார் மற்றும் அவர் எங்கு வளர்ந்தார் என கூறி இருப்பார்.
மேலும், சுந்தரச்சோழனுக்கும் நந்தினுக்கும் என்ன தொடர்பு, வீரபாண்டியனுக்கும், மந்தாகினிக்கும் என்ன உறவு, நந்தினி ஏன் மந்தாகினி மாதிரி இருக்கிறாள் என இரண்டாம் பாகத்தில் விரிவாக கூறுவார்கள்.
மணிரத்னம் இயக்கத்தில் வலிமைமிக்க இரட்டை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் அறிமுகமான இருவர் படத்தில் இருந்து, மீண்டும் இருபது வருடங்கள் கழித்து அதே மணிரத்னம் இயக்கத்தில் இரட்டைக் கதாபாத்திரங்களில் ஏற்று நடித்தது சிறப்பாக உள்ளது.
இன்னும் பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றி கூறுவதற்கு பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் உள்ளன. அதனை, அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம்.
Share this Post
Ready for non-stop movie excitement?
Don’t miss out on movie magic! Tap ‘Subscribe’ and let’s dive into the cinematic adventure together