Movie Buddie

சோஷியல் மீடியாவில் திரும்பும் பக்கம் எல்லாம் சிவகார்த்திகேயன் – இமான் தொடர்பான செய்திகள்தான் தெரிகின்றன. உண்மையிலேயே என்ன நடந்தது என்று Movie Buddie-க்கு தெரியாது. ஆனால், இந்த பிரச்னை எப்படி உருவானது என Movie Buddie வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

இமான், ஒரு சேனலுக்கு கொடுத்த நேர்காணலில், சிவகார்த்திகேயன் தனக்கு வெளியில் சொல்ல முடியாத துரோகத்தை செய்து விட்டார், அதனை சொன்னால் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கும் என கூறியிருந்தார். இந்த வீடியோ வைரல் ஆகத் தொடங்கியதுமே, இதனுடனே இரண்டு மாதத்திற்கு முன்னதாக ‘கிசுகிசு’ சேனலில் வெளியான ஒரு வீடியோவை இணைத்து ‘உண்மைதான் போல’ என்று அதையும் டிரென்ட் செய்தார்கள்.

இவ்வாறு, இதனைப் பற்றி ட்ரோல், மீம்ஸ் என அனைத்தையுமே செய்து டிரென்ட் ஆவதைப் பார்த்த சேனல், இதனை செய்தியாக்கினார்கள். அது மட்டுமல்லாமல், சிவாகார்த்திகேயன் – இமான் தொலைபேசியில் பேசி வீடியோவை டெலிட் செய்யும்படி சொன்னதாக ‘வலைப்பேச்சு’ கொளுத்தி விட்டார்கள்.

இப்படியாக காட்டுத்தீ போன்று இந்த விவகாரம் பரவத் தொடங்கியதும், இமானின் மனைவி, ‘சிவகார்த்திகேயன் ரொம்ப பாவம். அவர் ஒரு நல்ல மனிதர்’ எனக் கூறியது மட்டுமல்லாமல், இமானுக்கு பட வாய்ப்பு இல்லை என்பதால், இவ்வாறு கூறி வருகிறார் என கூறினார்.

இவ்வாறு இமானின் மனைவி விளக்கம் கொடுத்தும், இந்த விஷயம் இன்னும் பேசுபொருளாக மாறிவிட்டது. சோஷியல் மீடியாவில் சிலர், ‘இமான் பாவம்’ என சொல்கிறார்கள். மேலும் சிலர், ‘சிவகார்த்திகேயன் தங்கம்’ என கூறுகிறார்கள்.

தற்போது, இமான் தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து இரண்டாவது மனைவி உடன் வாழ்ந்து வருகிறார். இது ஒரு மூன்று பேர் தொடர்புடைய விஷயம். ஆனால், இமானின் மனைவி இது குறித்து பேசியதும், இந்த விஷயம் பூதாகரமாக மாறிவிட்டது.

மற்ற நடிகர்களைப் போல அல்லாமல், சிவகார்த்திகேயன் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ போன்ற நிலையில் இருப்பதால், இந்த விவகாரம் அவரது தரத்தை மிகவும் பாதிக்கும். இதுதான் சோஷியல் மீடியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு மேல், இந்த பிரச்னைக்கான காரணம் என்ன என்பது, அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம்.

முக்கியமாக, இந்த விவகாரத்தில் மூன்று பெண்கள், அவர்களுக்கு பெண் குழந்தைகள் என இருப்பதால், நாம் வாய்க்கு வந்த படியெல்லாம் பேசுவது தவறான ஒன்று.

விடியல் ஆட்சியில், விடியற்காலையில் காட்சி போட மாட்டீர்களா என கேட்ட விஜய் ரசிகர்கள், உதயநிதி ஸ்டாலினின் ட்வீட்டால் சாந்தம் அடைந்திருக்கிறார்கள். லியோ படம், LCU-வா எனக் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், லியோ படத்தைப் பார்த்த உதய், ட்வீட்டில் LCU எனக் குறிப்பிட்டார்.

தலைவராக இருந்த அவரது தந்தை, தளபதியாக மாறிவிட்டதால், ‘தளபதி விஜய் அண்ணா’ எனக் குறிப்பிட்டு, அவரது வாழ்த்தை லியோ குழுவினருக்கு கூறி இருக்கிறார். லியோ, LCU-வில் இணையுமா என்பதை எப்படி எல்லாம் தெரிவிக்கப் போகிறார்கள் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், இப்படி வெளியாகி உள்ளது.

LCU, லியோவில் எந்த அளவு பயணிக்கும் என்பது தெரியாது. ரோலக்ஸ், டில்லி ஆகிய கதாபாத்திரங்கள் படத்தில் வருவது பற்றி கேட்டதற்கு, படத்தில் பாருங்கள் என லோகேஷ் கனகராஜ் கூறிவிட்டார். ஆனால், பாவம், எவ்வளவோ நேர்காணல் கொடுத்தான் லோகேஷ் மறைத்து வைத்திருந்ததை, உதயநிதி போட்டு உடைத்துவிட்டார்.

நீண்ட நாட்களாக பொத்தி பொத்தி வைத்திருந்த விஷயம் இது. அதேநேரம், இதனை நெல்சன் அல்லது சிவகார்த்திகேயன் போன்றோர் அல்லது அடித்தட்டில் இருந்து வந்த நட்சத்திரங்கள் கூறி இருந்தால், அனைவரும் எதிராக கேள்வி எழுப்பி இருப்பார்கள். ஆனால், உதயநிதி பதவியில் இருப்பதால், ‘சின்னவரே மாஸ்’ என Fire விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

‘நீட் ரத்து செய்வதற்கான ரகசியத்தைக் கூறாமல், லியோ ரகசியத்தை சொல்லிக் கொண்டிருக்கிறாயே தலைவா’ என யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். முன்னதாக, ரெட் ஜெயன்ட்தான் லியோ படத்தை தடுப்பதாக செய்திகள் பரவின. ஆனால், இப்போது உதயநிதிக்குதான் லியோ குழுவினர் படத்தையே போட்டிருக்கிறார்கள்.

அரசுதான் லியோ படத்தைத் தடுக்கிறது என மறுபுறம் பேசி அரசியல் செய்து வருகிறார்கள், இதனைப் பார்ப்பவர்களை ஜோக்கர் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போல. ஆனால், Movie Buddie-க்கு எதற்கு அரசியல்?

லியோ படம் குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டிய லோகேஷ் கனகராஜ், திருப்பதியில் தரிசனத்தை முடித்து விட்டு, ராமேஸ்வரத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார். ‘இன்று இரவு லியோ வருகிறது. கைதி, விக்ரம் ஆகிய படங்களைப் பாருங்கள்’ என லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்வார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மறுபுறம், அனுராக் காஷ்யப், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘Coming soon’ என போட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டிருக்கிறார். LCU-வில் அனிருத் உடன் விஜய்யும் இணைந்திருப்பது லியோ படத்திற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பைக் கொடுத்துள்ளது.

பாதி பேரின் மனம், லியோ [படத்தை நம்பிதான் இருக்கிறது. எனவே, லியோ படம் நன்றாகவே இருக்கும் என நம்புவோம்.

மேலும், இந்த வருடத்திற்கான தேசிய விருதுகள் சமீபத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘கடைசி விவசாயி’ படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது கிடைத்திருக்கிறது. பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், அவருடைய ஷேர் சா என்ற படத்திற்காக தேசிய விருதைப் பெற்றிருக்கிறார்.

சிறந்த நடிகருக்கான விருதை அல்லு அர்ஜுனும், சிறந்த நடிகைக்கான விருதை கிருத்தி சனோன் மற்றும் அலியா பட் ஆகிய இருவரும் பகிர்ந்திருக்கிறார்கள். அலியா பட், தனது திருமணப் புடவையில் விருது வாங்க, அதனை அவரது கணவர் புகைப்படம் எடுக்க என அங்கேயே அவர்கள் Couple goals செய்து கொண்டிருந்தார்கள்.

இந்த நிகழ்வில் மாதவன், தேவி ஸ்ரீ பிரசாத், ஸ்ரேயா கோஷல் ஆகியோர் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Post

80s Build up movie review

1980-களில் கதைக்களம் அமைக்கப்பட்டு உள்ளது. சந்தானம் ஒரு தீவிர கமல் ரசிகர். இவரது...

Read More

Annapoorani Movie Review

நயன்தாரா ஒரு இடத்தில் சமையல் செய்து கொண்டிருக்கிறார். அங்கு ஒரு விபத்து நடக்கிறது....

Read More

Parking Movie review

ஹரீஷ் கல்யாணும், இந்துஜாவும் புது வீடு ஒன்றிற்கு குடி வருகிறார்கள். இதற்கு கீழ்...

Read More

Sivakarthikeyan Vs Imman Controversy Issue | Udhay (LEO)

சோஷியல் மீடியாவில் திரும்பும் பக்கம் எல்லாம் சிவகார்த்திகேயன் – இமான் தொடர்பான செய்திகள்தான்...

Read More

Ready for non-stop movie excitement?

Don’t miss out on movie magic! Tap ‘Subscribe’ and let’s dive into the cinematic adventure together

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *